Your Ad Here

3 படங்களில் போலீஸ் அதிகாரியாக சரத்குமார்


      சரத்குமார் தற்போது 3 படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். சமுத்திரக்கனி டைரக்ட் செய்யும் நிமிர்ந்து நில் படத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஹீரோ ஜெயம்ரவியை துரத்துவது அவரது வேலை. அடுத்து அச்சம் தவிர் என்ற படத்தில் போலீஸ் சூப்பிரண்டாக நடிக்கிறார்.

இதுதவிர வேளச்சேரி என்ற படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாகவும், இளம் வழக்கறிஞராக இனியா நடிக்கிறார். சரத்குமார் போட்டுத் தள்ளும் என்கவுண்டருக்கு எதிராக போராடுபவராக இனியாவுக்கு வித்தியாசமான கேரக்டர்.

என்கவுண்டர் செய்யும் போலீஸ் அதிகாரிகளின் குடும்பம் அதனால் மனரீதியாக எப்படி பாதிக்கப்டுகிறார்கள் என்கிற கோணத்திலும், உண்மையான என்கவுண்டர் எது, போலி என்கவுண்டர் எது என்கிற கோணத்திலும் சொல்லப்படுகிற கதையாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேளச்சேரியில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகிறது. திருமலை வேந்தன் என்பவர் டைரக்ட் செய்கிறார். நிழல்கள்ரவி, இமான் அண்ணாச்சி, செண்ட்ராயன் நடிக்கிறார்கள். தற்போது படப்பிடிப்புகள் கோவாவில் நடைபெற்று வருகிறது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்