Your Ad Here

புதிய 'ஈட்டி'யில் ஹீரோவாகிறார் அதர்வா


       சமீபகாலமாக, ஏற்கனவே ஓடி, வெற்றி பெற்ற படங்களின்தலைப்புகளை, புதிதாக தயாராகும் படங்களுக்கு வைப்பது, பேஷனாகி விட்டது. ரஜினி நடித்த, 'நான் மகான் அல்ல, தில்லு முல்லு' படங்களின் பெயர்களை தொடர்ந்து, விஜயகாந்த் நடித்து வெற்றி பெற்ற, 'ஈட்டி' படமும், இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. இந்த படத்தில், அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். பொருத்தமான ஹீரோயினை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா என, ஒவ்வொரு மாநிலமாக, வலைவீசி தேடி வருகின்றனர். இன்னும் யாரும் சிக்கவில்லையாம். இதுகுறித்து படக் குழுவினர் கூறுகையில், 'இந்த படத்தின் கதைக்கும், பழைய, 'ஈட்டி' படத்தின் கதைக்கும், எந்த சம்பந்தமும் இல்லை. பெயர் மட்டும் தான், ஒன்றாக உள்ளது. மற்றபடி, இந்த காலத்துக்கு ஏற்ற, புதிய கதையை தயார் செய்துள்ளோம். படத்தின் கதைக்கு, 'ஈட்டி' என்ற பெயர், பொருத்தமாக இருப்பதால், அந்த தலைப்பை தேர்வு செய்தோம்' என்கின்றனர்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்