Your Ad Here

இனியாவுக்கு ஒரு லட்சம் ரசிகர்கள்


  தற்போது, நடிகர் - நடிகைகள் 'பேஸ்புக்' மூலம், தங்கள் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் உள்ளனர். அந்த வகையில், மலையாள சினிமாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லாலை விட, 'நேரம்' நஸ்ரியாவுக்கு அதிகப்படியான பேஸ்புக் ரசிகர்கள் உள்ளனராம். இதைப் பார்த்து, கேரள சினிமாவைச்சேர்ந்த மேலும், சில நடிகைகளும், பேஸ்புக் மூலம், தங்களுக்கான ரசிகர்களை பெருக்கும் முயற்சியில் இறங்கிஉள்ளனர். அதில், 'வாகை சூடவா' இனியா முதலிடம் பிடித்துள்ளார். சமீபத்தில் தான், தன் பேஸ்புக் கணக்கை துவங்கிய, இவர் தன்னைப்பற்றிய, தினசரி தகவல்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டு வந்ததோடு, ரசிகர்களின் கேள்விகளுக்கும் சுவையாக பதில் கொடுத்து வருகிறாராம். இதனால், நாளுக்கு நாள் இனியாவுக்கான ரசிகர்கள் அதிகரித்து கொண்டுஇருக்கின்றனராம். அந்த வகையில், தற்போது இனியாவுக்கு, ஒரு லட்சம் பேஸ்புக் ரசிகர்கள் இருக்கிறார்களாம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்