Your Ad Here

மகேஷ்பாபுவுக்கும் ஷாக் கொடுத்த கோச்சடையான்!


   தமிழ்நாட்டில் விஜய், அஜீத் போன்ற நடிகர்களின் படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவித்த நிலையிலும், திடீரென ரஜினியின் கோச்சடையான் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரிலீசானாலே தியேட்டர் பிரச்னை, வசூல் பிரச்னை ஏற்படும். இந்த நேரத்தில் ரஜினியும் களமிறங்குகிறாரே என்று கோடம்பாக்கம் ஷாக் ஆகி நிற்கிறது.

இந்த நேரத்தில் ஆந்திராவிலும் கோச்சடையானை ரிலீஸ் செய்வதால் முக்கிய தியேட்டர்களை கைப்பற்றும் முயற்சிகள் நடக்கிறதாம். ஆனால், தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபு நடித்த நெனெக்கடினே என்ற படமும் கோச்சடையானை வெளியிட திட்டமிடப்பட்டுள்ள அதேதேதியில் வெளியிடுகிறார்களாம். அதனால், முக்கிய ஏரியாவில் உள்ள தியேட்டர்களை கைப்பற்றுவதில் அவர்களும் கோதாவில் குதித்திருக்கிறார்களாம்.

ரஜினி நடித்திருப்பது அனிமேஷன் படம்தான் என்றாலும், அவருக்கு இருக்கிற மாஸ் தங்களது படங்களின் வசூலை பாதித்து விடும் என்று கோலிவுட்டில் அஞ்சுவது போன்று டோலிவுட்டிலும் அஞ்சுவதே இதற்கு காரணமாம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்