Your Ad Here

1200 தியேட்டர்களில் இரண்டாம் உலகம் ரிலீஸ்!


          செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடித்துள்ள இரண்டாம் உலகம் வருகிற 22ந் தேதி ரிலீசாகிறது. சுமார் 25 கோடி பட்ஜெட்டில் திட்டமிடப்பட்டு தொடங்கப்பட்ட இந்தப் படம் 60 கோடி பட்ஜெட்டில் முடிந்திருக்கிறது. தெலுங்கில் வர்ணா என்ற பெயரில் ரிலீசாகிறது. ஹீரோ ஆர்யாவுக்கு 60 கோடி அளவிற்கு வியாபாரம் கிடையாது. தெலுங்கில் அனுஷ்காவை தெரிந்த அளவிற்கு ஆர்யாவைத் தெரியாது. இதனால் தயாரிப்பாளர் எதிர்பார்த்த அளவிற்கு படம் வியாபாரமாகவில்லை என்று தெரிகிறது. என்றாலும் படத்திற்கு பொது மக்களிடம் எதிர்பார்ப்பு இருப்பதால் நம்பிக்கையுடன் படத்தை வெளியிடுகிறார்கள். தமிழ், தெலுங்கு மொழியில் உலகம் முழுவதும் 1200 தியேட்டர்களில் படத்தை ரிலீஸ் செய்கிறார்கள். அத்தனை தியேட்டர்களிலும் இரண்டு வாரம் ஹவுஸ்புல்லாக ஓடினால் பட்ஜெட் பணத்தை எடுத்துவிடலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறார்கள்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்