Your Ad Here

விஜய் ஒரு சூப்பர் டான்சர்! இங்கிலாந்து நடிகை புகழாரம்!!


     தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் நடனத்தில் கூடுதல் கவனம் செலுத்தும் விஜய், தனக்கு இணையாக ஆடக்கூடிய கதாநாயகிகளையே ஓ.கே செய்வார். படம் முழுக்க அடிதடி ஆக்சனாக இருந்தாலும், பாடல் காட்சி கிளுகிளுப்பாக குறிப்பாக, ரசிகர்களை கவரும் வகையிலான நடனத்தில் இருக்க வேண்டும் என்று கருதுவார். அதனால்தான் கதை கேட்பது போலவே, தான் நடிக்கிற படங்களின் டியூனையும் கேட்டு ஓ.கே செய்கிறார் விஜய்.

இந்த நிலையில், பொங்கலுக்கு வருகிற ஜில்லா படம் எல்லா விதத்திலும் ரசிகர்களை திருப்திபடுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு விசயத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார் விஜய். குறிப்பாக, பஞ்ச் டயலாக் என்பதை தவிர்த்து விட்டவர், காதல், செண்டிமென்ட், ஆக்சன் காட்சிகளில் தனது பழைய படங்களின் சாயல் எதுவும் இல்லாத அளவுக்கு புதுசாக ஆக்டு கொடுத்திருக்கிறாராம்.

இதற்கெல்லாம் மேலாக, தலைவாவில் எதிர்பார்த்தபடி நடனங்கள் அமையவில்லை என்பதால், இந்த படத்தில் காஜல்அகர்வாலுடன் சேர்ந்து பாடல் காட்சிகளில் பட்டைய கிளப்பும் அளவுக்கு படுஸ்பீடாக நடனம் செய்திருக்கிறாராம். ஆனால, மொத்த படத்தையும் முடித்துவிட்டு பர்ஸ்ட் காப்பி பார்த்தபோது, குத்துப்பாட்டு இல்லாதது ஒரு குறையாக இருந்ததாம். அதை அவர் இயக்குனரிடம் சொல்ல, உடனே சுடச்சுட ஒரு குத்துப்பாட்டை ரெடி பண்ணி விட்டார்களாம்.

அதையடுத்து, அதிரடியான பாடல் என்பதால், அதிரடியாக ஆடக்கூடிய நடிகை வேண்டும் என்று தேடியபோதுதான், இந்தி, தெலுங்கு படங்களில் குத்துப்பாட்டுக்கு நடனமாடி வரும் இங்கிலாந்து நடிகை ஸ்கேர்லட் வில்சன் நினைவிற்கு வந்தாராம். அதனால் ஒரு பெரிய தொகையை கொடுத்து அவரை புக் பண்ணி இப்போது அந்த அந்த பாடலையும் படமாக்கி விட்டனர்.

இப்பாடலில் விஜய்க்கு இணையாக சூப்பர் குத்தாட்டம் போட்டிருக்கும் ஸ்கேர்லட் வில்சன், இதுவரை எனது ஆட்டத்தினால் நான்தான் மற்ற ஹீரோக்களை அதிர வைத்து வந்தேன். ஆனால் இந்த படத்தில் விஜய் என்னை அதிர வைத்துவிட்டார். உண்மையிலேயே அவர் ஒரு சூப்பர் டான்சர்தான் என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்