Your Ad Here

வெற்றி தோல்வியை கருத்தில் கொள்ளாத அனுஷ்கா!


    சினிமாவைப்பொறுத்தவரை படங்களின் வெற்றிதான் அப்படத்தில் சம்பந்தப்பட்ட கலைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும். ஆனால், ஆரம்பத்தில் வெற்றி பெறுவதற்கான அம்சங்கள் அடங்கிய கதைகளாக மட்டுமே ஓ.கே செய்து வந்த அனுஷ்கா, இப்போது அந்த ட்ராக்கில் இருந்து மாறி விட்டார். கதையும், அதில் எனக்குரிய கதாபாத்திரமும் திருப்திகரமாக இருந்தால் மட்டுமே நடிப்பேன் என்று ஓப்பனாக சொல்லி படங்களில கமிட்டாகி வருகிறார்.

இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, சினிமாவில் படங்களின் வெற்றிதான் முக்கியம் என்பது எனக்குத் தெரியும்.ஆனால், எந்த படம் வெற்றி பெறும், எந்த படம் வெற்றி பெறாது என்பதை இன்னமும் என்னால் கணிக்க முடியவில்லை. நான் இந்த படம் பெரிய ஹிட்டாகும் என்று நம்பி நடிக்கிற படம் தோற்றுவிடுகிறது. இந்த கதை சுமாராகத்தான் இருக்கிறது என்று நினைக்கிற படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகி விடுகிறது. இப்படி வெற்றி தோல்வி கணிக்க இயலாத காரியமாக உள்ளது.

அதனால் இப்போதெல்லாம் வெற்றி தோல்வி என்பதைநான் கருத்திலே எடுத்துக்கொள்வதில்லை. எனக்கு திருப்திதரக்கூடிய படங்களாக மட்டுமே ஒத்துக்கொண்டு வருகிறேன். அப்படி நடித்த படம்தான் இரண்டாம் உலகம். இதேபோன்று எனது திறமைக்கு சவால்விடக்கூடிய இன்னும் நிறைய படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார் அனுஷ்கா.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்