திருமணம் செய்து கொள்வதாக நடிகையிடம் ரூ.50 லட்சம் மோசடி
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நடிகையிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்த நபரைக் கைது செய்யுமாறு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் ராதா (30). இவர் சுந்தரா டிராவல்ஸ், காத்தவராயன், மானஸ்தன், அடாவடி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக அவருக்கு படவாய்ப்புகள் இல்லாத நிலையில் வெள்ளிக்கிழமை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்த அவர், பரபரப்புப் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஒருவர், தன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாகவும், ரூ.50 லட்சம் பணம், நகைகளை மோசடி செய்து விட்டதாகவும் புகார் தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் ராதா கூறியது:-
கடந்த 2008-ல் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த பைசூல் என்பவர் எனக்கு அறிமுகமானார். தான் ஒரு வைரவியாபாரி என்றும், விரைவில் ஒரு புதுப்படம் தயாரிக்க உள்ளதாகவும் என்னிடம் தெரிவித்தார்.
அதில் என்னை கதாநாயகியாக நடிக்க வைப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக அவர் அடிக்கடி என்னைச் சந்தித்து வந்தார். சில மாதங்களுக்குப் பிறகு அவர் என்னை மிகவும் நேசிப்பதாகவும், என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.
இதை நம்பி நானும் அவருடன் பழகி வந்தேன். இந்நிலையில் தனக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும், அதனை ஈடுகட்ட பணம் தேவைப்படுவதாகவும் என்னிடம் கூறினார். அதிலிருந்து மீண்ட பிறகுதான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று பைசூல் கூறினார்.
இதனால், என்னிடம் இருந்த ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் பணம் மற்றும் தங்க நகைகளை அவரிடம் கொடுத்தேன். அதன் பிறகும் அவர் என்னைத் திருமணம் செய்யத் தயங்கியதால் சந்தேகமடைந்து அவரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினேன்.
அப்போது தான் பைசூலுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட விஷயம் எனக்குத் தெரிந்தது. மேலும் அவர் சட்ட விரோதமான தொழில்களில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது.
இது குறித்து அவரிடம் கேட்ட போது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே பைசூல் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை மீட்டுத் தரவேண்டும் என்று நடிகை ராதா தெரிவித்தார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
