
திருமணம் என்னும் நிக்கா படத்தில் நஸ்ரியாவுடன் இணைந்து நடித்து வருகிறார் ஜெய். இதையடுத்து நவீன சரஸ்வதி சபதம், பொடியன் உள்பட பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். ஆனால், அடுத்தபடியாக நஸ்ரியாவுடன் அவருக்கு புதிய படங்கள் கமிட்டாகாததால் வருத்தத்தில் ஜெய் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன.
ஆனால் இதுபற்றி ஜெய்யைக்கேட்டால், நஸ்ரியா ஒரு நல்ல தோழி. திருமணம் என்னும் நிக்கா படத்தில் அவர் கமிட்டானபோது சுத்தமாக தமிழே தெரியாது.
அதுதான் அவரது முதல் தமிழ் படம் என்பதால், டயலாக் பேச நானும் உதவியாக இருந்திருக்கிறேன். அதனால் அவர் என்னிடம் நெருங்கி பழகினார். அதைப்பார்த்து நாங்கள் லவ் பண்ணுவதாக கோலிவுட்டில் தண்டோரா போட்டு விட்டார்கள்.அதை நாம் கண்டு கொள்வது போல் இருந்தால், இன்னும் பெருசுபடுத்தி விடுவார்கள் என்பதால் கண்டு கொள்ளாமலேயே இருந்தோம். அதனால் இப்போது அந்த டாக் காணாமல் போய் விட்டது.
குறிப்பாக நய்யாண்டி படத்தின் தொப்புள் விவகாரம வெடித்ததில் எங்களது காதல் வதந்தி காணாமல் போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்போது திருமணம் என்னும் நிக்கா படப்பிடிப்பு முடிந்து விட்டதால், நானும், நஸ்ரியாவும் வெவ்வேறு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அவரை பிரிந்ததை நினைத்து நான் வருத்தப்படுவதாக வெளியான செய்தி காமெடியாக உள்ளது என்று சொல்லும் ஜெய், சினிமாவில் நடிப்பதும் ரயில் சிநேகம் போல்தான்.
ஒரு படத்தில் நடித்து முடித்தால் அடுத்த படத்தில் வேறு நடிகர்-நடிகைகளுடன் நடித்துக்கொண்டிருப்போம். இது தெரிந்த கதைதானே என்று கேசுவலாக சொல்கிறார் ஜெய்.