Your Ad Here

கிராபிக்ஸ் டிசைனர் டைரக்ட் செய்யும் திருடன் போலீஸ்


  தமிழ் சினிமாவின் பிரபல கிராபிக்ஸ் டிசைனர் கார்த்திக். படையப்பா முதல் அந்நியன் வரை 150 படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை செய்திருக்கிறார். அவர் முதன் முறையாக திருடன் போலீஸ் என்ற படத்தை டைரக்ட் செய்கிறார். படத்தை தயாரிப்பவர் எஸ்.பி.பி.சரண். அட்டகத்தி தினேஷ், ஐஸ்வர்யா நடிக்கிறார்கள். தான் படம் டைரக்ட் செய்ய வந்தது பற்றி கார்த்திக் கூறியதாவது:

150 படத்துக்கு கிராபிக்ஸ் செய்திருக்கிறதால அந்த படங்கள் உன்னிப்பா பார்க்குற வாய்ப்பு கிடைச்சுது. நானும் ஒரு கதை ரெடி பண்ணி வச்சிருந்தேன். ஆரண்ய காண்டம் படத்துல ஒர்க் பண்றப்போ சரண் பிரண்டானார். அப்போ அவர்கிட்ட திருடன் போலீஸ் கதையை சொன்னேன். பிடிச்சிருக்கு நானே பண்றேன் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு சொன்னார். இப்போ அதுக்கான நேரம் வந்த உடன் ஆரம்பிச்சிட்டோம்.

வாழ்க்கையில விரக்தி அடைந்த ஒரு திருடனுக்கும்(ஹீரோ), போலீசுக்கும் முடிச்சு போட்டு ஆடுற காமெடிதான் படம். நம்ம ஊர் பக்கம் திருடன் போலீஸ் விளையாட்டு ரொம்ப பேமஸ். அப்படி ஒரு ஜாலியான விளையாட்டுதான் படம். என்கிறார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்