Your Ad Here

100 கோடி கிளப்பில் இணையும் 'ராம்லீலா'


    பாலிவுட்டில்,'கஜினி, 3 இடியட்ஸ், சென்னை எக்ஸ்பிரஸ், கிரிஸ் -3 ' போன்ற படங்கள், 100 கோடி ரூபாய்க்கு மேல், வசூல் செய்த படங்கள். இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான, 'ராம்லீலா, கோரி தேரே பியார், சிங் சாப் தி கிரேட்' ஆகிய படங்களுக்கு இடையே, இந்த, 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைவதில், கடும் போட்டி நிலவியது. படம் வெளியான, 10 நாட்களில், 'ராம்லீலா' படம் மட்டும், 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி உள்ளது. ரண்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகியோர் ஜோடியாக, இந்த படத்தில் நடித்துள்ளனர். தீபிகாவின் கலக்கலான நடனம் மற்றும் நடிப்பை பார்ப்பதற்காகவே, திரும்ப திரும்ப, இந்த படத்தை ரசிகர்கள் பார்க்கின்றனர். ஆனால், கரீனா கபூர் நடித்த, 'கோரி தேரே பியார்' படம் இன்னும், 10 கோடி ரூபாயையே எட்டவில்லையாம். அதேபோல், 'சிங் சாப் தி கிரேட்' படம், 14 கோடி ரூபாய் தான், வசூலித்துள்ளதாம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்