Your Ad Here

அனுஷ்காவும், தமன்னாவும் சமந்தாவின் தோழிகளாம்


     பொதுவாக, மார்க்கெட்டில் இருக்கும் சக நடிகைகளை, எதிரியாக பார்க்கிற காலமிது. அதிலும், ஒரே படத்தில் இரண்டு நடிகைகள் இணைந்து நடித்தால், அவர்களுக்கிடையே, ஈகோ' போர் வெடித்து, அந்த படப்பிடிப்பு முடியும் வரை ஒருவருக்கொருவர் கீரியும், பாம்பும் போலவே இருப்பர்.ஆனால், இதில் சமந்தா விதிவிலக்கு; தன்னுடன் எந்த நடிகை இணைந்து நடித்தாலும், அவர்களிடம் சகஜமா பழகி, மனதில் இடம் பிடித்து விடுகிறார்.அந்த வகையில், தெலுங்கில், பிருந்தாவனம்' என்ற படத்தில், அனுஷ்காவுடன் நடித்தபோது, அவரது நெருங்கிய தோழியான சமந்தா, இப்போதுவரை, நட்பை தொடர்ந்து வருகிறார். இப்படி அவர் நட்பு பட்டியலில், பல நடிகைகள் உள்ளனர்.மேலும், தெலுங்கில், தன் போட்டி நடிகையாக விளங்கும் தமன்னாவின் நடனத்தை, சமீபத்தில் பாராட்டிய சமந்தா, அவர் அளவுக்கெல்லாம், என்னால் நடனமாட முடியாது' என்று, வெளிப்படையாக கூறினார். இதையடுத்து, எதிரும் புதிருமாக இருந்த தமன்னா, இப்போது சமந்தாவின் உயிர்த் தோழியாகிவிட்டார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்