நடன அமைப்பாளராக சினிமாவில் அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக மாறி, இப்போது இயக்குநராக உயர்ந்துள்ள பிரபுதேவா, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களிலும் முன்னணி இயக்குநராக விளங்கி வருகிறார்.
பாலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் பிரபுதேவாவும் ஒருவர் என்று கூறப்படுகிறது. இதனிடையே இவர், அஜய் தேவ்கானை வைத்து இயக்கியுள்ள ”ஆக்ஷ்ன் ஜாக்ஷ்ன்” படம் தொடர்பாக சென்னை வந்திருந்தார்.
அப்போது, சென்னையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற பிரபுதேவா பேசியதாவது, தமிழ் படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கிறது. இங்குள்ள ஹீரோக்கள் கொடிகட்டி பறக்கிறார்கள். பாலிவுட் சினிமா, தமிழ் படங்களை உற்று நோக்கி கவனிக்கிறது. அதனால் மீண்டும் தமிழ்ப்படங்களில் நடிக்க ஆர்வமாய் இருக்கிறது. நல்ல கதை அமைந்தால் நடிப்பேன்.
ஒருபோதும் தமிழ் சினிமாவை மறக்க மாட்டேன். எதிர்காலத்தில் பட நிறுவனம் தொடங்கி, நல்ல தமிழ் படங்களையும் எடுக்கும் எண்ணம் உள்ளது. எனக்கு விருது வாங்கும் படங்களை இயக்கும் ஆசையில்லை, கமர்ஷியல் படங்களை மட்டுமே எடுக்க விரும்புகிறேன்.
தற்போது நான் இயக்கி வரும் ஆக்ஷ்ன் ஜாக்ஷ்ன் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
அதைத்தொடர்ந்து அக்ஷ்ய் குமாரை வைத்து ஒரு படம் இயக்குகிறேன். இதுதவிர ஏ.பி.சி.டி. இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறேன். தற்போது எனது சினிமா வாழ்க்கை பிஸியாக சென்று கொண்டு இருக்கிறது என்று கூறிய பிரபுதேவாவிடம், மீண்டும் திருமணம் செய்து கொள்ள எண்ணம் இருக்கிறதா என பத்திரிகையாளர் கேட்க, அதற்கு பிரபுதேவா அப்படி ஒரு எண்ணம் இல்லை, தனியாக வாழ்வதே இப்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறினார்.
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
