Your Ad Here

நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகர் அஜீத் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜீத். இவரின் வீடு சென்னை, திருவான்மியூரில் உள்ளது. தற்போது அஜீத், கெளதம் மேனன் இயக்கி வரும் புதிய படத்தில் ரொம்ப பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு அவசர அழைப்புக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், நடிகர் அஜீத் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சீக்கிரத்தில் வெடிக்க இருப்பதாகவும் கூறி வைத்துவிட்டார்.

இதனையடுத்து போலீஸார் நடிகர் அஜீத் வீட்டிற்கு சென்று வீடு முழுக்க வெடிகுண்டு இருக்கிறதா என சோதனை செய்தனர். வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. கடைசியில் அது வெறும் வதந்தி என்றும் தெரியவந்தது. அவசர அழைப்புக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் யார் என்று தெரியவில்லை. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்