அதேபோல். மலையாளத்தில் புகழ் பெற்ற நடிகர் மம்மூட்டியின் வாழ்க்கை கதையை மையப்படுத்தி ஒரு படம் தயாராகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு என 300 படங்களில் நடித்துள்ள மம்மூட்டியின் வாழ்க்கை கதைக் நட்சத்திரங்களுடே ராஜகுமாரன் என்று பெயர் வைத்துள்ளனர். நேரம் படத்தில் நடித்த நிவின் பாலி இதில் மம்மூட்டி வேடத்தில் நடிக்கிறாராம்.
மலையாள டைரக்டர் ஜூட் ஆண்டனி என்பவர் இயக்கும் இந்த படத்தில் மலையாள நடிகர்கள் இந்திரஜித் சுகுமாரன் சுகுமாரனாகவும், வினீத் சீனிவாசன் சீனிவாசனாகவும் நடிக்கிறார்களாம். அதோடு, குஞ்சக்கோ போபன் பிரேம் நசீர் வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் மோகன்லால் வேடத்தில் நடிக்க ஒரு முக்கிய நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறதாம். இவர்களுடன் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் மம்மூட்டியின் மகனாகவே நடிக்கிறாராம்.