Your Ad Here

கிராமத்து இளைஞனாக விக்ரம் பிரபு!

இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கும்கி படத்தின் மூலம் அறிமுகமானார் அதில் யானைபாகனாக நடித்தார். அதன் பிறகு இவன் வேற மாதிரி படத்தில் நகர்புறத்து நடுத்தர இளைஞனாக நடித்தார்.

அரிமா நம்பி படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது அவர் எழில் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடி வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்.

தேசிங்கு ராஜா படத்திற்கு பிறகு எழில் இயக்கும் இந்தப் படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. சூரி, சிங்கம்புலி, எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, என காமெடி டீமையும் களம் இறக்குகிறார்.

சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். 5 பாடல்கள் ரெடி, அதனுடன் அடுத்த வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறார் எழில்.

படம் பற்றி அவர் கூறியதாவது: மனம் கொத்தி பறவை, தேசிங்குராஜா மாதிரி கிராமத்து காமெடி கதைதான். ஆனால் அவற்றிலிருந்து முற்றிலும் வித்தியாசமான கதை. ஹீரோவும், ஹீரோயினும் சந்திப்பதற்கு முன்பு ஆளுக்கு ஒரு பிரச்னையில் சிக்கிக் கொள்கிறார்கள்.

சிக்கிய பிறகு ஒன்றாக சேர்ந்து காதலித்து சிக்கிய பிரச்னையை எப்படி தீர்க்கிறார்கள் என்பது கதை. முதன் முறையாக விக்ரம் பிரவு கிராமத்து இளைஞனாக நடிப்பதோடு காமெடியும் செய்கிறார் என்கிறார் எழில்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்