Your Ad Here

சந்தோஷத்தில் சந்தானம்…!!

”வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” என்று சந்தானம் சோலோ கதாநாயகராக நடித்திருக்கும் படத்திற்கு எந்த நேரத்தில் பெயர் சூட்டினார்களோ.?! தெரியவில்லை!! கிடைத்த ‘கேப்’பை எல்லாம் பட டைட்டிலுக்கு ஏற்பவே வல்லவனுக்கு புல்லும் ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டு ரஜினியின் கோச்சடையான், மே 9ம் தேதி வெளியாகவில்லை என்றதும், மே 16ம் தேதி ரிலீஸ் ஆக வேண்டிய ”வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” மே 10ம் தேதியே அரக்க பறக்க திரைக்கு வந்து கிடைத்த திரையரங்குகளை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு வெற்றி வாகை சூடி இருக்கிறது!

விடுமுறை தினங்களான கடந்த மே 10, 11, சனி, ஞாயிறுகளில் தமிழகம் முழுவதும் ஹவுஸ்புல் ஆன ”வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” திரையரங்குகள், வேலைநாளான திங்கட்கிழமை இன்றும் அரங்கு நிறைந்த காட்சிகளாக அதிர வைத்து கொண்டு இருப்பதால், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ நாயகர் சந்தானம், இயக்குநர் ஸ்ரீநாத்தும், பிவிபி தயாரிப்பு தரப்பும் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போகி இருக்கின்றனராம்!

நாளை முதல் தமிழகத்தில், தியேட்டர்களின் எண்ணிக்கையும் இப்படத்திற்கு கூட இருப்பதும் சந்தானத்தின் சந்தோஷத்திற்கு முக்கிய காரணமாகும் என்கின்றன விவரமறிந்த வட்டவாரங்கள்!

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்