மே 9 ஆம் தேதி வெளி வந்திருக்க வேண்டிய கோச்சடையான் படம் வெளிவரவில்லை. மாறாக மே 23 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலதாமதத்துக்கு தொழில்நுட்பக்கோளாறு என்று காரணம் சொல்லப்பட்டது.
ஆனால், கோச்சடையான்’ திரைப்படம் தயாரிப்பதற்காக வங்கிகளில் சுமார் 40 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது என்றும், அந்தத் தொகையை தயாரிப்பாளர் திருப்பி செலுத்தாததால்தான், கோச்சடையான் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது என்ற தகவல் பின்னர் வெளியானது.
வங்கிக் கடன் பிரச்சனையில் சிக்கியது மீடியா ஒன் குளோபல் நிறுவனம்தான். கோச்சடையான் படத்திற்காக பல கோடிகள் முதலீடு செய்ததோ மும்பையைச் சேர்ந்த ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம். இவ்விரு நிறுவனங்களும் இணைச் கோச்சடையான் படத்தைத் தயாரித்திருப்பதாக சொல்லப்பட்டது.
தற்போது மீடியா ஒன் குளோபல் நிறுவனம் நிதி சிக்கலில் மாட்டி இருப்பதால், கோச்சடையான் படத்தின் முதன்மை முதலீட்டுத் தயாரிப்பு நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல், தாங்களாகவே படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் அடிபடுகிறது.
அதாவது, நிதி சிக்கலில் மாட்டி உள்ள மீடியா ஒன் நிறுவனத்தை கழட்டிவிட்டு, மற்ற பிரச்சனைகளையும் தாங்களே சுமுகமாக தீர்த்துவிட்டு கோச்சடையான் படத்தை வெளியிட முடிவெடுத்திருக்கிறார்களாம்.
ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் இந்த முயற்சி வெற்றியடைந்தால் ‘கோச்சடையான்’ படத்தை 23ம் தேதியன்று வெளிவருவது உறுதி என்கிறார்கள் திரையுலகை சேர்ந்தவர்கள்.
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
