Your Ad Here

ஜெய் நடிக்கும் படம் பொடியன்


   உதயம் என்.எச்.4 படத்தை இயக்கிய மணிமாறன், தான் அடுத்து இயக்கவிருக்கு படத்திற்கும் ‘பொடியன்’ என்றுதான் பெயர் வைத்துள்ளார்.

இதில் பொடியனாக நடிப்பவர் ஜெய். இதை இயக்குனர் மணிமாறனும் உறுதிப்படுத்தியுள்ளார். படப்பிடிப்பு வரும் ஜனவரியில் தொடங்க இருக்கிறது. படத்தின் நடிகை யார் இன்னும முடிவாகவில்லை.

படம் குறித்து மணிமாறன் கூறியதாவது: “பொதுவாக ஒருவனை அவன் பலம் தெரியாமல் குறைத்து மதிப்பிடுவதற்குத்தான் ‘பொடியன்’ என்ற வார்த்தையை எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்தப்படம் வெளியாகும்போது அதற்கான அர்த்தமே வேறுவிதமாக மாறப்போகிறது” என்றார்.

தற்போது ஜெய் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும், நவீன சரஸ்வதி சபதம், திருமணம் எனும் நிக்காஹ், வடகறி போன்ற படங்களில் பிஸியாக உள்ளார். வீடுகளில் சிறுவயது பையன்களைக் குறிப்பிட்டு அழைக்க பயன்படுத்தும் வார்த்தைதான் இந்த ‘பொடியன்’.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்