Your Ad Here

வயலின் கலைஞர்களின் இசை ஆல்பம்


        வயலின் கலைஞர்களான கணேஷ், குமரேஷ் இருவரும் புவி வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சீசன்ஸ் என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளனர். ஹோம் ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இதன் வெளியீட்டு விழா, மியூசிக் அகாடமியில் நடந்தது. இதுபற்றி கணேஷ், குமரேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:வயலின் கலைஞர்களாக எங்கள் வாழ்க்கை தொடங்கியது. இடையில் கே.பாலசந்தர் எங்களை ஒரு வீடு இருவாசல் படத்தில் நடிக்க வைத்தார். தெலுங்கில் என்.டி.ராமாராவுடன் நடித்தோம். பிறகு முழுமையாக இசைத்துறைக்கு வந்துவிட்டோம். உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்தி இருக்கிறோம்.

 பல்வேறு சமூக விழிப்புணர்வுகளை இசை மூலம் ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறோம். அதற்காக சீசன்ஸ் என்ற ஆல்பத்தை உருவாக்கி உள்ளோம். வசந்தகாலம், மழைகாலம், வெயில் காலம், பனிக்காலம் என்று நாம் காலங்களை பிரித்து வைத்திருக்கிறோம். இவை மாறி வருகிறது. காரணம் புவி வெப்பமாகி வருகிறது. இதை உணர்த்தி இயற்கையை காப்பாற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளோம். 12 இசை கலைஞர்கள், இதில் பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்