Your Ad Here

அரசியலுக்கு போனது வாழ்க்கையில் செய்த பெரும் தவறு: கோவிந்தா!


     சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே சாமியராகி அதிர்ச்சி கொடுத்தவர் கோவிந்தா. பல வருடங்கள் ஆசிரமத்தில் வாழ்ந்தவர் பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்தார். திடீரென அரசியலுக்குள் நுழைந்து அடுத்த அதிர்ச்சியை கொடுத்தார். இப்போது அரசியலையும் விட்டு விலகி மீண்டும் நடிக்கப்போகிறார்.

தனது அரசியல் அனுபவம் பற்றி அவர் கூறியிருப்பதாவது: அரசியலுக்கு போனதில் இருந்து என் சந்தோஷம் போய்விட்டது. அதில் எப்போதும் ஓட்டம், பதற்றம், பயம், விரக்தி, ஏக்கம், போராட்டம்தான். அதில் நுழைந்துவிட்டு மீண்டு வர முடியாமல் பலர் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் கடவுளின் கருணையால் தப்பி வந்துவிட்டேன்.

எந்த நடிகரும் விரும்பி அரசியலுக்கு செல்வதில்லை. ஆசை காட்டி இழுக்கப்படுகிறார்கள். அல்லது வலுக்கட்டாயமாக தள்ளப்படுகிறார்கள். நடிகர்கள் எளிதாக அரசியல்வாதியாகிவிடலாம். எந்த அரசியல்வாதியாலும் நடிகனாக முடியாது. சிலருக்கு பட்டால்தான் புத்தி வரும். எனக்கும் பட்டுத்தான் புத்தி வந்திருக்கிறது. இனி அரசியல் பக்கமே தலைவைத்து படுக்க மாட்டேன். அவ்வளவு அனுபவதித்திருக்கிறேன். என் வாழ்க்கையில் சில தவறான முடிவுகள் எடுத்திருக்கிறேன். பெருந் தவறான முடிவு அரசியலுக்கு சென்றதுதான்.இவ்வாறு கோவிந்தா கூறியுள்ளார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்