Your Ad Here

தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டும்-விஜய் சேதுபதி


     விஜய் சேதுபதி கூறியதாவது: ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் படங்கள் ரிலீசுக்கு தயாராகி விட்டன. அடுத்து மெல்லிசை, புறம்போக்கு, வன்மம், இடம் பொருள் ஏவல் படங்களில் நடிக்கிறேன். படத்தில் ஒப்பந்தமாகும்போது, வித்தியாசமான கதையா என்று மட்டும்தான் பார்ப்பேன். என்னுடன் நடிப்பவர்கள் யார் என்று பார்க்க மாட்டேன். எனது கேரக்டரில் ஏதாவது வித்தியாசம் செய்து காட்ட முடியுமா என்று யோசிப்பேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றுவிட்டால், டைரக்டர் சொல்வதை மட்டுமே செய்வேன். என்னுடன் நடிக்கும் நடிகர்களுக்கும் முக்கியத்துவம் இருக்க வேண்டும். அப்போதுதான் படம் சிறப்பாக வரும்.

யாருடன் வேண்டுமானாலும் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கிறேன்.தொடர்ந்து வெற்றிப் படங்கள் கொடுத்ததால், ரசிகர் மன்றம் ஆரம்பிக்க வேண்டும் என்று பலர் அணுகினார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. மன்றங்கள் வேண்டாம் என்று அன்புடன் மறுத்துவிட்டேன். நான் நடிக்கும் படங்களின் தயாரிப்பாளர்கள் எந்தவிதத்திலும் நஷ்டம் அடையக்கூடாது என்பதுதான் என் எண்ணம். அவர்கள் போட்ட பணத்தை திரும்ப எடுக்க வேண்டும் என்பதற்காக, எல்லா கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு நடிப்பேன்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்