Your Ad Here

மீண்டும் குஜாலா கதையுடன் அமலாபாலை துரத்தும் டைரக்டர்!


   விகடகவி, வீரசேகரன், படங்களில் நடித்து வந்த அமலாபால், அதையடுத்து அனகா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு நடித்த படம்தான் சிந்துசமவெளி. படத்தின் தலைப்பைக்கேட்டு ஏதோ சிந்து சமவெளியின் நாகரீகத்தை பரப்புகிறார்கள் போலும் என்று ரசிகர்கள் தியேட்டருக்குள் சென்றால், அங்கு, மாமனாரும், மருமகளும் குஜாலா பண்ணும் கதையை படமாக்கி வைத்திருந்தார் இயக்குனர் சாமி.

அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவர் வீடு மீது கல்லெறிந்தும், தியேட்டர்களுக்கு முன்பு போராட்டங்களையும் நடத்தினர். அதனால் அப்படத்தில் மாமனாராக நடித்த கஜினிக்கு அதன்பிறகு படமே இல்லை. ஆனால், அமலாபால் மட்டும் எப்படியோ தட்டுத்தடுமாறி மைனா படத்தில் நடித்து முன்னணி நடிகையாகி விட்டார். விக்ரம், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து மேல்தட்டு நாயகியாகி விட்ட அவர் கவர்ச்சி விசயத்தில் அடக்கியே வாசித்து வருகிறார்.

இந்த நேரத்தில், ஒரு புதுமுக இயக்குனர், சந்தர்ப்ப சூழ்நிலையில் செக்சுக்கு அடிமையாகும் ஒரு குடும்பப் பெண்ணைப்பற்றிய கதையை ரெடி பண்ணிக்கொண்டு அமலாபாலிடம் சொன்னாராம். ஆனால், சிந்துசமவெளியில் அப்படியொரு வேடத்தில் நடித்ததற்காக இப்போதுவரை வெட்கப்பட்டுக்கொண்டிருக்கிறேன். அதற்கான பிராயசித்தமாகத்தான் கவர்ச்சிகரமான வேடங்களைகூட தவிர்த்து வருகிறேன். இந்த நிலையில், மீண்டும் அப்படியொரு சேற்றை வாரி என் மீது இறைத்துக்கொள்ள நான் தயாராக இல்லை என்று அந்த டைரக்டரை விரட்டியடித்து விட்டாராம்.

இருப்பினும், அந்த கதையில் நீங்கள் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும். அதோடு அவார்டுகூட கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று சொல்லிக்கொண்டு அமலாபாலை விடாமல் துரத்திக்கொண்டு திரிகிறாராம் புதுமுக இயக்குனர். அமலாபால் அவர் கையில் சிக்குவாரா? மறுபடியும் காமக்கொடூர அவதாரம் எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்