Your Ad Here

மீண்டும் இணைகிறது பாஸ் கூட்டணி


        டைரக்டர் ராஜேஷ். எம், ஆர்யா, நயன்தாரா, சந்தானம் கூட்டணியில் வந்த பாஸ் என்கிற பாஸ்கரன் செம ஹிட் படம். இப்போது இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது.
ஆல்இல்ஆல் அழகுராஜாவின் தோல்விக்குப் பிறகு டைரக்டர் ராஜேஷ். எம்மின் இமேஜ் டவுனாகிவிட்டது. அவரை வைத்து அடுத்த படம் பண்ண வாக்கு கொடுத்தவர்களும், அட்வான்ஸ் கொடுத்தவர்களும் பின்வாங்க... நண்பேண்டா என்று தோள்கொடுக்க வந்திருக்கிறார் ஆர்யா.

அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான தி ஷோ பீப்பிள்தான் ராஜேஷ் இயக்கத்தில் அடுத்த படத்தை தயாரிக்கப்போகிறது. ஆர்யா, சந்தானம் நடிப்பது உறுதியாகிவிட்டது. நயன்தாரா கால்ஷீட்டுக்காக வெயிட்டிங். இப்போதுள்ள சூழ்நிலையில் நயன்தரா மறுத்தாலோ கால்ஷீட் கிடைக்காவிட்டாலோ ஹன்சிகாவுக்கு வாய்ப்பிருக்கிறது. நயன்தாராவை ஜோடியாக்கி சிம்பு ஆர்யாவை வெறுப்பேற்றுவதால். ஹன்சிகாவை தனக்கு ஜோடியாக்கி சிம்புவை வெறுப்பேற்ற ஆர்யா தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜுன் மாதம் ஷ¨ட்டிங் ஆரம்பிக்கிறாங்க

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்