Your Ad Here

தமிழ் படிக்கும் மனம் கொத்தி பறவை ஆத்மியா


  மனம் கொத்திப் பறவை" படத்தில், சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ஆத்மியா. பிரபல நடிகை மீரா ஜாஸ்மினின் தங்கையான இவருக்கும், அக்காவைப் போல, தமிழ், மலையாளம் என, இரண்டு மொழி நடிகையாக வேண்டும் என்ற ஆசை உள்ளது.அதனால், தீவிர முயற்சிக்கு பின், இப்போது, 'போங்கடி நீங்களும் உங்க காதலும்' என்ற படத்தில் நடித்திருக்கும் ஆத்மியா, இதே படத்தில் நடித்திருக்கும் கன்னட நடிகை காருண்யா, தன்னைவிட சிறப்பாக, தமிழ் பேசியதைப் பார்த்து, ஆச்சரியப்பட்டு போனார்.'ஒரே ஒரு தமிழ் படத்தில் நடித்தவர், இத்தனை அழகாக தமிழ் பேசும்போது, இரண்டாவது படத்தையும் முடித்த நம்மால், பேச முடியவில்லையே' என்று, இப்போது, தன் அக்கா மீரா ஜாஸ்மினிடம், தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார், ஆத்மியா.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்