போராடுகிறாள் மெய்யழகி!
நேற்று (நவம்பர் 22) மெய்யழகி என்ற படம் ரிலீசானது. 15 வருடங்களாக சினிமாவில் போராடி இயக்குனராகி இருக்கும் ஆர்.டி.ஜெயவேல் என்பவர் டைரக்ட் செய்திருக்கும் படம். காதல் சொல்ல வந்தேன் படத்தில் அறிமுகமான பாலாஜி மனநலம் குன்றிய வாலிபராக நடித்திருக்கிறார். ஆரோகணம் படத்தில் நடித்த ஜெய் குஹேனி பாசமுள்ள அக்காவாக நடித்திருக்கிறார்.
பட்ஜெட் காரணமாக படத்தில் டெக்னிக்கலாக சில குறைபாடுகள் இருந்தாலும் தம்பிக்காக வாழ்க்கையை தியாகம் செய்யும் ஒரு அக்காவின் வாழ்க்கையை உண்மைக்கு மிக நெருக்கமாக சொல்லும் படம். மீடியாக்களும், படத்தை பார்த்த சினிமா பிரமுகர்களும் படத்தை பற்றி பாராட்டிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் படத்தை திரையிட தியேட்டர் இல்லை. விளம்பரம் செய்ய தயாரிப்பாளரிடம் பணம் இல்லை. அதனால் பார்க்க மக்கள் தியேட்டருக்கு வரவில்லை.
சென்னையில் சத்யம், அபிராமி, பிவிஆர், உதயம், ரோகிணி, காம்பளக்ஸ்களில் ஒரு காட்சியும். அண்ணா, அகஸ்தியா, ஸ்ரீநிவாசா தியேட்டர்களில் ஒன்றிரண்டு காட்சியாகவும் படம் திரையிடப்பட்டுள்ளது. நாளை இந்தப் படத்தில் நடித்த பாலாஜிக்கோ, ஜெய்குகேனிக்கோ, டைரக்டருக்கோ விருதுகள், பாராட்டுகள் கிடைக்கலாம். இன்றைக்கு ஓடினால்தானே படத்தை நம்பி தயாரித்த அந்த புது தயாரிப்பாளருக்கு போட்ட பணமாவது கிடைக்கும். "நல்ல தமிழ் படங்கள் இனி எப்படித்தான் வாழப்போகிறதோ தெரியவில்லை" என்று கலங்கிக் கொண்டிருக்கிறார்கள் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனரும்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
