Your Ad Here

ஷங்கர் படத்தில் விஷாலா?


        நல்ல படங்களை வாய்விட்டு பாராட்டுகிற வழக்கம் இங்கும் யாருக்கும் இருப்பதில்லை. சம்பந்தப்பட்ட படத்தின் வெற்றிவிழா மேடையிலேயே நின்று கொண்டு நான் இன்னும் இந்த படத்தை பார்க்கலே என்று சொல்லும் ஏராளமான முன்னணி கலைஞர்களை கண்டு முகம் சுளிப்பதும் இப்போது வாடிக்கையாகிவிட்டது.

ஆனால் ஐ படத்தின் பிசியான ஷெட்யூலுக்கு நடுவில் பாண்டியநாடு படத்தை பார்த்துவிட்டு தனது ட்விட்டரில் விஷால், சுசீந்திரன் உள்ளிட்ட குழுவினரை பாராட்டியிருக்கிறார் டைரக்டர் ஷங்கர்.

இதில் ஓவராக மெல்ட் ஆகிவிட்டார் விஷால். உடனடியாக ஷங்கரை தொடர்பு கொண்டு நன்றி சொன்னாராம். அப்போது பேசப்பட்ட வார்த்தைகளில்தான் வருங்கால சுபிட்சம் ஒன்று காத்திருந்தது விஷாலுக்கு. நாம சேர்ந்து வொர்க் பண்ணியதில்லை. அதுக்கான சந்தர்ப்பம் வரும்னு நினைக்கிறேன் என்றாராம் ஷங்கர். இப்படி பாண்டிய நாடு தனக்காக ஏற்படுத்தும் பாதைகளை எண்ணி சந்தோஷத்திலிருக்கிறார் விஷால்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்