ஜெயம் ரவி விளக்கம் புறம்போக்கு படத்திலிருந்து விலகியது ஏன்?
எஸ்.பி.ஜனநாதன் அடுத்து டைரக்ட் செய்யும் படம் புறம்போக்கு, யுடிவி மோசன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் ஜெயம்ரவியும், ஜீவாவும் இணைந்து நடிப்பதாக இருந்தது. இப்போது இருவருமே நடிக்கவில்லை. அவர்களுக்கு பதிலாக ஆர்யாவும், விஜய்சேதுபதியும் நடிக்கிறார்கள். புறம்போக்கில் இருந்து விலகியது ஏன் என்பது பற்றி ஜெயம்ரவி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
ஜனநாதன் சாருக்கும் எனக்கும் ஆத்மார்த்தமான நட்பும், புரிதலும் இருக்கிறது. அவர்கூட எப்போது வேண்டுமானாலும் படம் பண்ணுவேன். இப்போது நான் நடித்து வரும் பூலோகம், நிமிர்ந்து நில் இரண்டு படங்களுமே திட்டமிட்டபடி முடிக்காமல் தாமதமாகிவிட்டது. அடுத்து அண்ணன் டைரக்ட் செய்யுற படத்துல நடிக்கப்போறேன். அதுவரைக்கும் ஜனநாதன் சாரை எப்படி காக்க வைக்கிறது. அதனால நாம அப்புறமே சேர்ந்து படம் பண்ணுவோம். இப்போ வேற ஹீரோவை வச்சு பண்ணிடுங்கன்னு சொன்னேன். ஆர்யா, விஜய்சேதுபதி சரியான சாய்ஸ். அந்தப்படத்தோட கதை எனக்குத் தெரியும். பெரிய படம், ஆர்யாவுக்கும் விஜய்சேதுபதிக்கும் தங்களோட கேரியர்ல அது முக்கியமான படமாக இருக்கும். நான்தான் மிஸ்பண்ணிட்டேன். அந்த வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. என்றார் ஜெயம் ரவி.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
