Your Ad Here

‘அட்டக்கத்தி’ தினேஷ் நடிக்கும் ‘திருடன் போலீஸ்’


   ‘சென்னை 600 028’, ‘குங்குமப்பூவும் கொஞ்சுப் புறாவும்’, மற்றும் தேசிய விருது பெற்ற ‘ஆரண்ய காண்டம்’ ஆகிய படங்களை தயாரித்த எஸ்.பி.பி.சரணின் கேபிடல் பிலிம் ஒர்க்ஸ் நிறுவனம், கெனன்யா பிலிம் சார்பில் ஜே,செல்வகுமாருடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘திருடன் போலீஸ்’.

முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்துடன் உருவாகும் இப்படத்தில் நாயகான ‘அட்டக்கத்தி’ தினேஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘ரம்மி’ படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா நடிக்கிறார். மேலும், பாலசரவணன், நிதின் சத்யா, ஜான்விஜய், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். படத்திற்கு கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கார்த்திக் ராஜூ. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படம் குறித்து தயாரிப்பாளர் எஸ்.பி.பி.சரண் கூறும்போது, நான் எப்போதுமே என் படங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என மெனக்கெடுவேன். எனது முந்தைய படங்கள் எனக்கு அத்தகைய படங்களாகவே அமைந்தன.

சிறிது காலம் படத்தயாரிப்பில் நான் ஈடுபடாமல் இருந்தாலும், இப்போது ‘திருடன் போலீஸ்’ படத்தின் இயக்குனர் கார்த்திக் கூறிய கதை உடனடியாக படம் எடுக்கும் ஆவலைத் தூண்டியது. எனது முந்தைய படங்கள் போலவே இந்த படமும் எனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு மணிமகுடமாக திகழும். திறமையான கலைஞர்கள் ஒருங்கிணைந்து இருக்கும் இந்த படம் நிச்சய வெற்றி பெரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்