Your Ad Here

சிறப்பு தோற்றத்தில்நடிக்கிறார் 'அஜீத் '


      பில்லா'வுக்கு பின், அஜீத் நடித்த படங்கள் பெரிய வெற்றியை கொடுக்காத நிலையில், வெங்கட்பிரபுவுடன் இணைந்த, 'மங்காத்தா' படம் தான், அஜீத்துக்கு பெரிய ஹிட்டாக அமைந்தது.அதற்கு முன்பு வரை, தன் ஒரிஜினல் தோற்றத்தை, எந்த படத்திலும் காட்டாமல் இருந்த அஜீத், 'மங்காத்தா'வில் தான், நரைத்த தலைமுடி, தாடி என்று, தன் நிஜ தோற்றத்திலேயே நடித்திருந்தார்.அதன் பின், 'ஆரம்பம், வீரம்' படங்களிலும், அதே கெட்டப்பை தொடர்ந்தார். பெருவாரியான ரசிகர்களுக்கு, அந்த கெட்டப் பிடித்து விட்டதால், இனி அதையே தொடரப்போகிறாராம்.மேலும், தன் புதிய கெட்டப்புக்கு வித்திட்ட வெங்கட்பிரபுவின் புதிய படமொன்றிலும், அடுத்து நடிக்கிறாராம் அஜீத். சிறிய பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தில், நட்பு கருதி, சிறப்பு தோற்றத்தில் நடிக்க, அஜீத் சம்மதித்துள்ளதாக, கோலிவுட்டில் தகவல் கசிந்துள்ளது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்