7 வருடங்களுக்கு பிறகு மோதிக்கொள்ள தயாராகும் அஜீத்-விஜய்!
அஜீத்-விஜய் இருவரும் ஒரு கட்டத்தில் போட்டி மனப்பான்மையுடன் செயல்பட்டபோதும், கடந்த சில ஆண்டுகளாக நண்பர்களாகி விட்டனர். இதனால் அவர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியாகி பரபரப்பு கூட்டும் நிகழ்வுகளும் இல்லாமல் போனது.
அந்தவகையில், 7 வருடங்களுக்கு முன்பு அஜீத் நடித்த ஆழ்வாரும், விஜய் நடித்த போக்கிரியும் ஒரே நேரத்தில் திரைக்கு வந்தன. இதில் ஆழ்வாரை விட போக்கிரியே வசூல் சாதனை புரிந்தது. அதுதான் அவர்கள் கடைசியாக மோதிக்கொண்டது. அதன்பிறகு அதற்கான சூழல் அமையவில்லையா? இல்லை போட்டியே வேண்டாம் என்று அவர்களாக விலக்கிக்கொண்டார்களா? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
இந்த நிலையில், தலைவாவைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் ஜில்லா பொங்கல் ரிலீசுக்கு வேகமாக தயாராகி வருகிறது. இதற்கிடையே ஆரம்பத்தை தீபாவளிக்கு வெளியிட்ட அஜீத், பொங்கலுக்கு வீரம் படத்தை வெளியிடப்போவதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். இதனால், மீண்டும் அஜீத்-விஜய் மோதுவதற்கான சூழல் உருவாகியிருக்கிறது.
ஆனால் அப்படியொரு சூழ்நிலை உருவாகவே கூடாது என்று விநியோகஸ்தர்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்களாம். காரணம், இரண்டு பேரின் படமும் ஒரே சமயத்தில் தியேட்டருக்கு வந்தால், வசூல் பாதி பாதியாகி விடும். அதில் ஏதேனும் ஒரு படம் தோற்று விட்டால், அதை வாங்கியவர்களுக்கு பலத்த நஷ்டம் ஏற்படும் என்பதே அதற்கு காரணமாம்.
அதனால், இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் மோதவிடக்கூடாது என்பது சம்பந்தமாக சில விநியோகஸ்தர்கள் இப்போதே பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கி விட்டார்களாம்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
