5 படங்களில் இருந்து கழட்டி விடப்பட்ட நஸ்ரியா!
நேரம், ராஜாராணி படங்களில் நடித்த நஸ்ரியாநசீமுக்கு அதற்கடுத்து 5 படங்கள் புக்காகும் நிலை இருந்தது. ஆனால் துக்கடா தொப்புள் விவகாரத்தை அம்மணி மலையளவு பிரச்னையாக்கியதால் கோலிவுட்டே பலத்த அதிர்ச்சியடைந்தது. அதையடுத்து தனுஷ், ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் அவர் நடிப்பதைப்பார்த்து அடுத்து அவரது மார்க்கெட் எகிறப்போகிறது என்று நினைத்து கால்சீட்டுக்காக படையெடுத்த அத்தனைபேருமே கழட்டிவிட்டு விட்டனர்.
அந்த வகையில், 5 படங்கள் வரை இழந்திருக்கிறார் நஸ்ரியா. தற்போது அவரது கைவசம் ஜெய்யுடன் நடிக்கும் திருமணம் என்னும் நிக்கா மற்றும் பாலாஜி மோகன் இயக்கும் படம் என இரண்டு படங்கள் மட்டுமே உள்ளது. இதில் திருமணம் என்னும் நிக்காதான் அவர் தமிழில் ஒப்பந்தமான முதல் படம்.
ஆக, இந்த தொப்புள் சர்ச்சைக்குப்பிறகு அவருக்கு புக்காகியிருப்பது பாலாஜி மோகன் படம் மட்டுமே. இந்த படத்தில் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பதால், தமிழ், மலையாளம் என இரண்டு மொழியிலும் படத்தை வெளியிடுவதால், இரண்டு மொழிக்கும் பரிட்சயமான நடிகை உடனடியாக கிடைக்காமல் நஸ்ரியா பக்கம் சாய்ந்திருக்கிறார்களாம்.
இப்படி எதிர்பாராதவிதமாக மார்க்கெட் சரிந்து விட்டதால், இனி கோடம்பாக்கத்தை நம்பி புண்ணியம் இல்லை என்று முடிவெடுத்து விட்ட நஸ்ரியா, தனது தாய்மொழியான மலையாளத்தில் ஆழக்காலூன்ற முடிவெடுத்து விட்டார். அதனால் சென்னையில் வீடு பார்த்து குடியேறி வந்தவர் அந்த திட்டத்தையும் கிடப்பில் போட்டிருக்கிறார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.
