Your Ad Here

கமல் கைவிட்ட சண்டியரை பிடித்தது வேந்தர்


    2004ம் ஆண்டு கமல் நடித்து இயக்கிய படம் விருமாண்டி. மதுரையை கதைக்களமாக கொண்ட இந்தப் படம் ஒரு சம்பவத்தை இரண்டு பார்வையால் பார்க்கும் வித்தியாசமான திரைக்கதை அமைப்பை கொண்டது. இந்தப் படத்துக்கு கமல் முதலில் சண்டியர் என்றுதான் பெயர் வைத்திருந்தார்.

தென்தமிழ்நாட்டில் ஒரு குறிப்பிட் ஜாதியின் முரட்டுத்தனமான இளைஞர்களை சண்டியர் என்று குறிப்பிடுவது வழக்கமாக இருந்தது. அதனால் அந்த பெயரை வைக்ககூடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் இருந்து குறிப்பிட்ட சில மக்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பவே கமல் சண்டியர் தலைப்பை கைவிட்டு படத்தில் அவர் கேரக்டர் பெயரான விருமாண்டியை வைத்து விட்டார்.

இப்போது அதே சண்டியர் என்ற பெயரில் ஒரு படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. சோழ தேவன் என்பவர் டைரக்ட் செய்கிறார். நியூபேஸ்கள் நடிக்கிறார்கள். யதீஷ் மகாதேவ் மியூசிக், ரித்தீஸ் கண்ணா கேமரா மேன்.

உயிர்மெய் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கிறது. சங்கர், பிரசாத், செந்தில்குமார் என மூன்று தயாரிப்பாளர்கள். படத்தை வேந்தர் மூவீஸ் சார்பில் எஸ்.மதன் வாங்கி வெளியிடுகிறார். அன்று படத்தின் தலைப்பை எதிர்த்தவர்கள் இப்போது அனுமதிப்பார்களா? மீண்டும் பொங்கி எழுவார்களா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்