Your Ad Here

ஜில்லா பட ஆடியோ டிசம்பர் 15-ல் வெளியீடு


       விஜய்யின் ஜில்லாவைப் பொறுத்தவரை மிகப் பிரமாண்டமான முறையில் ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது.

புதுமுகம் நேசன் இயக்குகிறார். மலையாள சுப்பர் ஸ்டார் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். விஜய்யுடன் இவர் இணைவது இது இரண்டாவது தடவை. விஜய் கூட, இப்படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

இதனிடையே ஜில்லா படத்தின் ஆடியோவை வரும் டிசம்பர் 15-ந் தேதி வெளியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் அன்றைய தினமே படத்தின் டிரைலரும் வெளியிடப்படுகிறது. இதனால், திட்டமிட்டபடி ‘ஜில்லா’வும் பொங்கன்று வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். தமிழகம் மற்றும் கேரளாவில் ஏற்கனவே படம் பாதியளவு தியேட்டர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதால் நல்லதொரு ஆரம்ப வசூலை படம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படியோ, வீரம் மற்றும் ஜில்லா பொங்கல் ரிலீஸ் என்பதால் வரும் டிசம்பரில் இருந்து பரபரப்புக்கு பஞ்சம் இருக்கப்போவதில்லை. இந்த அதிரடிப்போட்டியில் சூப்பர் ஸ்டாரின் கோச்சடையான் திரைப்படமும் கலந்து கொள்ளும் எனத் தெரிகிறது.

ஏற்கனவே பல தடவைகள் ஒத்தி வைக்கப்பட்ட கோச்சடையான் வரும் பொங்கலுக்காவது ரிலீஸ் ஆகுமா என்பது இயக்குனர் சௌந்தர்யாவுக்கே தெரிந்த வெளிச்சம்.


Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்