அனுராதா ஸ்ரீராம் பாடிய பாடல் எப்படி ஈழத்துப் பாடல் ஆகும்? என்கிறீர்களா?
இந்தப் பாடலை எழுதியவர், இசையமைத்தவர் ஆகியோர் ஈழக்கலைஞர்கள். பாடியவர் மட்டும் அனுராதா ஸ்ரீராம்.
உங்கள் வாழ்க்கையில் சோகம் இருக்கலாம்! துயரம் இருக்கலாம்! இந்தப் பாடலை ஒரே ஒருமுறை கேளுங்கள். கேட்கும் போதே பாடல் கண்டிப்பாக பிடித்துவிடும்.
“ஒவ்வொரு பூக்களும் சொல்கிறதே” போல, இதுவும் மெல்ல வருடி, இதயத்தை ஊடுருவி, எதேதோ எல்லாம் செய்யும்.
இந்தப் பாடலின் வரிகள் அவ்வளவு ஆறுதலாக இருக்கும். அதைவிட பாடலின் மெட்டு......., எனக்கு மயக்கமே வராத குறைதான்...!
பாடலை எழுதியவர் பற்றியும், இசையமைத்தவர் பற்றியும் இன்று நான் எதுவுமே சொல்லப் போவதில்லை.
என்ன அவசரம்?? இவர்களைப் பற்றி நிறையவே சொல்ல இருக்கு...!!! சொல்கிறேன்.வாருங்கள் பாடலைக் கேட்போம்!
viva- ஈழத்து ரசிகன்