Your Ad Here

குறும்படம் செல்வன்

வெளிநாட்டுக் கனவுகளுடன் இங்கே வரத்துடிக்கும் இளைஞர்களுக்கு / அவர்களை எப்படியாவது வெளிநாட்டுக்கு அனுப்பத் துடிக்கும் பெற்றோர்களுக்கு, இங்கே ஒவ்வொரு இளைஞனும் படும் கஷ்டங்கள் புரிவதில்லை. பல பிரச்சனைகள் இருந்தாலும் - முக்கிய பிரச்சனையே வேலை இல்லா பிரச்சனைதான்!

வேலை இல்லாத ஒரு இளைஞன் படும் கஷ்டங்கள் / அவமானங்களை மிக அழகாக படம்படித்துக் காட்டியிருக்கிறது “செல்வன்” குறும்படம்! இதில் நடித்த கலைஞர்களுக்கு முதலிலேயே வாழ்த்துக்களை சொல்லாவிட்டால், என்னால் இதனை தொடர்ந்து எழுத முடியாது.

காரணம் அவ்வளவு சிறப்பாக / யதார்த்தமாக / இயல்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் செல்வன் பாத்திரத்தில் நடிக்கும், அந்த நடிகரது நடிப்பு அபாரம்! சோகம், வெறுமை, கவலை, இயலாமை என அத்தனை உணர்வுகளையும் அழகாக தன் நடிப்பிலே கொண்டுவருகிறார். அவருக்கு ஷ்பெஷல் வாழ்த்துக்கள்!

“செய்யும் தொழிலே தெய்வம்” என்று நினைக்காமல், கௌரவத்துக்காக தொழில் செய்பவர்களை, அல்லது தொழில் செய்வதிலே கௌரவம் பார்ப்பவர்களை செருப்பால் அடித்திருக்கிறார்கள் இந்தப் படத்தில்...!! நமக்கு சாப்பாடு போடும் எந்த தொழிலும் கேவலமானது இல்லை என்பதை ஆணித்தரமாக சொல்கிறது படம்!

படத்தின் முடிவு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் தன்னம்பிக்கை விதைகளை அள்ளி இறைத்திருக்கிறது, படத்தின் முடிவு.

படக் குழுவினர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! - ஒற்றை வரியில் சொல்வதானால், மிக அருமையான குறும்படம்!!

எனக்கு கூட நாளை வேலை இல்லாது போனால், கவலையே படமாட்டேன். இந்த உணர்வை ஊட்டிவிட்டதால், படம் வெற்றிபெற்று விட்டது எனலாம்!!

அனைத்து நண்பர்களும் அவசியம் பாருங்கள்!!


Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்