Your Ad Here

விஷ்ணு இப்போ ரொம்ப பிசி


 விஷ்ணு மிகவும் நம்பிக்கையோடு எதிர்பார்த்த நீர்ப்பறவை சரியாக போகாதததில் ரொம்பவே அப்செட். ஆனாலும் இப்போது 5 படங்களில் நடிச்சிக்கிட்டிருக்கேன். நான் ரொம்ப பிசியாத்தேன் இருக்கேன் என்கிறார். மேலும் அவர் கூறியதாவது: எத்தன் படத்தை இயக்கிய சுரேஷ் டைரக்ட் செய்யும் கலக்குற மாப்புள்ள படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன். எனக்கு ஜோடியாக பிந்து மாதவி நடிக்கிறார். தற்போதைய வெற்றிப்பட தயாரிப்பு நிறுவனமான திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் முண்டாசுபட்டி படத்தில் நடிக்கிறேன். கற்றது தமிழ் ராம் டைரக்ட் செய்கிறார். ஹீரோயினாக அட்டக்கத்தி நந்திதா நடிக்கிறார்.

என்னை வெண்ணிலா கபடி குழு மூலம் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய சுசீந்திரன் அடுத்து இயக்கும் வீரதீரசூரன் படத்தில் நான்தான் ஹீரோ. இது என்னை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் முக்கியமான படமாக இருக்கும். தி நெக்ஸ்ட் பிக் பிலிம் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இடம் பொருள் ஏவல் படத்தில் நடிக்கிறேன். இதை என்னை நீர்பறவையில் நடிக்க வைத்த சீனு ராமசாமி டைரக்ட் செய்கிறார். இதில் என்னோடு விஜய் சேதுபதியும் நடிக்கிறார். இருவருக்கும் சம வாய்ப்புள்ள வித்தியாசமான படம். நான் ராஜாவாக போகிறேன் படத்தை தயாரித்த சந்திரன் தயாரிப்பில் உருவாகும் அடுத்த படத்தில் நடிக்கிறேன். படத்தின் பெயரும், ஹீரோயினும் இன்னும் முடிவாகவில்லை.

2014 கடைசி வரை கால்ஷீட் புல். பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். பெரிய கம்பெனி, பெரிய டைரக்டர்கள் படங்களில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. என்கிறார் விஷ்ணு.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்