Your Ad Here

கிரிஷ்-3 யும் தீபாவளிக்கு ரீலீசாகும் ஆரம்பம்,ஆல்இன்ஆல் அழகுராஜா,..... படங்களுடன் போட்டியில் இணைகிறது


    வருகிற தீபாவளிக்கு அஜீத்தின் ஆரம்பம், விஷாலின் பாண்டியநாடு கார்த்தியின் ஆல்இன்ஆல் அழகுராஜா ரீலீசாகிறது. இந்த தீபாவளி போட்டியில் இப்போது இந்திப் படமான கிரிஷ்-3யும் குதிக்கிறது.

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் அவரது தந்தை ராகேஷ் ரோஷன் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கி இருக்கும் படம். பிரியங்கா சோப்ரா, கங்கனா ரனாவத், விவேக் ஓபராய், நடித்திருக்கிறார்கள்.

முந்தைய இரண்டு கிரிஷ் படங்களும் இந்தியில் வெற்றி பெற்றது. ஆனால் தமிழில் வெற்றி பெறவில்லை. என்றாலும் கிரிஷ்-3 யையும் தமிழில் டப் செய்து ரிலீஸ் செய்கிறார்கள்.

தமிழ் பாடல்களை அண்ணாமலை எழுதி உள்ளார். ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் படங்களின் வரிசையில் இந்தியாவில் தயாராகும் கிரிஷ் படத்துக்கும், உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தீபாவளிக்கு முதல்நாள் நவம்பர் முதல் தேதி ரிலீசாகிறது. இதுவரை வேறெந்த இந்திப் படமும் வெளியாகாத எண்ணிக்கையில், அதாவது 4 ஆயிரம் திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாகிறது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்