Your Ad Here

சிவகார்த்திகேயன் ‘சம்பளம் முக்கியமில்லை கதை தான் முக்கியம்’


   கோலிவுட்டின் இப்போதைய முன்னணி நடிகர்களில், சிவ கார்த்திகேயனும் ஒருவர். ஹன்சிகாவுடன் சேர்ந்து, ஒரு படத்தில், தற்போது நடித்து வருகிறார்.

இது தவிர, மேலும் சில வாய்ப்புகளை, கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில், ஒரு பெரிய பேனரில், ஹீரோவாக நடிப்பதற்கு, சிவாவுக்கு அழைப்பு வந்ததாகவும், சம்பளம் குறைவாக இருந்ததால், அதை, அவர் ஏற்க மறுத்து விட்டதாகவும், பரபரப்பான தகவல்கள் வெளியாகின. ஆனால், சிவா, அதை மறுத்துள்ளார்.

‘குறிப்பிட்ட பேனரில் இருந்து, யாரும் என்னை அணுகவே இல்லை. தவறான தகவல்களை பரப்பி விட்டனர். சம்பளத்துக்காக, எந்த ஒரு, நல்ல பட வாய்ப்புகளையும், இழப்பதற்கு நான், தயாரில்லை. எனக்கு, சம்பளம் முக்கியமில்லை; கதைதான் முக்கியம்’ என, ஒரு பேட்டியில், விளக்கமளித்து உள்ளார், சிவா.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்