ஒஸ்தி, போடா போடி படங்களுக்குப்பிறகு சந்தானம் நடித்திருந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் சிம்பு.
அதன்பிறகு வேட்டை மன்னன், வாலு என்ற இரண்டு படங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் படங்கள் முடிந்தபாடில்லை.
இதோ செட் போடுகிறார்கள். வெளிநாட்டுக்கு சென்றிருக்கிறார்கள் என்ற தகவல்கள்தான் வருகிறதேயொழிய படங்கள் முடிந்தபாடில்லை. இதுவரை எப்படியோ ஆனால், இப்போது வாலு படத்தை முதலில் முடித்து விடுவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் சிம்பு.
அதற்கடுத்து வேட்டை மன்னனையும் அடுத்த ஆண்டில் வெளியிட்டு விட்டு, அதற்கடுத்து தான் நடிக்கும் படங்களுக்கான புதுக்கணக்கை ஆரம்பிக்கப்போகிறாராம்.
சிம்புவின் இந்த திடீர் வேகத்துக்கு முக்கிய காரணமே தனுஷ்தானாம். இருவரும் மேடைகளில் நண்பர்களாக காட்டிக்கொண்டாலும், மனதளவில் போட்டியாளர்களாகத்தான் இருக்கிறார்கள்.
அந்த வகையில், இந்தியில் ராஞ்சனா, அதன் தமிழ் ரீமேக்கான அம்பிகாபதி, நேரடி தமிழ் படமாக மரியான் என மூன்று படங்களை இந்த ஆண்டில் தனுஷ் கொடுத்து விட்டதால், தனது சார்பில் ஒரு படம்கூட வெளியாகாதது சிம்புக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.
அதனால், இனிமேல் ஒவ்வொரு படத்தையும் வருடக்கணக்கில் சவ்வாக இழுக்காமல், வருடத்திற்கு 2 படங்களிலாவது நடித்து வெளியிட்டு விட வேண்டும் என்று 2014ல் உறுதிமொழி எடுக்கவிருக்கிறாராம் சிம்பு.