Your Ad Here

3ம் வகுப்பு படிக்கும்போதே காதலில் விழுந்த அமலாபால்: அவரே வெளியிட்ட ரகசியம்


  தற்போது வெற்றிகரமான ஒரு இளம் இயக்குனரை காதலிப்பதாக சொல்லப்படும் அமலாபால் 3ம் வகுப்பு படிக்கும்போதே ஒருவரை காதலித்திருக்கிறார். அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம்பிடித்திருக்கிறார். இந்த ரகசியத்தை அவரே வெளியிட்டிருக்கிறார். இந்த காதல் பற்றி அவர் கூறியிருப்பதாவது:

நான் ஆரம்ப கல்வி கற்றது இருபாலர் பள்ளியில். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது நான்காம் வகுப்பு படித்த ஒரு மாணவனை காதலித்தேன். அவனுக்கு லவ் பேர்ட்ஸ் படம்போட்ட வாழ்த்து அட்டை கொடுத்து லவ்வை புரபோஸ் பண்ணினேன். அதை என் அம்மாவிடம் சொல்லி அவனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்றேன்.

அதிர்ச்சி அடைந்த அம்மா என்னை உடனே பெண்கள் மட்டுமே படிக்கும் பள்ளியில் சேர்த்துவிட்டார். அதுமுதல் கல்லூரி வரை ஒண்லி லேடீஸ் ஸ்டடிதான். ஆண்கள் பக்கமே அம்மா அனுப்பவில்லை. அந்த காதலை இப்போது நினைத்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கிறது.

என் பிரண்டுங்க கல்யாணத்துக்கு போகும்போது நானும் அங்கு மணப்பெண்ணாக இருப்பது போல கற்பனை செய்து கொள்வேன். திருமண விழாக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். எனது திருமணம் ராஜஸ்தானி பாணியில் கலர்புல்லாக நடக்க வேண்டும் என்று ஆசை.

முதல் பார்வையிலேயே வசப்படுத்தும் ஆணைத்தான் காதலித்து திருமணம் செய்வேன். அப்படி ஒருவரை சந்தித்தால் உடனே காதலிக்கத் தொடங்கிவிடுவேன்.

இவ்வாறு அமலாபால் கூறியிருக்கிறார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்