Your Ad Here

விஞ்ஞான ரீதியாக கிராமத்து ரகசியங்களை ஆராயும் சினிமா


  ஒவ்வொரு கிராமத்துக்கும் ஏதாவது ஒரு மர்ம ரகசியம் ஒன்று இருக்கும். அந்த ரகசியங்களை விஞ்ஞான ரீதியாக ஆராயும் படம் ஒன்று ரெடியாகிக் கொண்டிருக்கிறது. படத்தோட பெயர் அப்புச்சி கிராமம். ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் வி.ஆனந்த் டைரக்ட் செய்கிறார். கனடாவில் வாழும் என்.ஆர்.ஜ., விஷ்ணு முரளி தயாரிக்கிறார். இவர் ஏற்கெனவே கனடாவில் ஏ கன் அண்ட் ரிங் என்ற படத்தை தயாரித்தவர். விஷால் மியூசிக் டைரக்டர், ஜி.கே.பிரசாத் கேமராமேன்.

"கிராமங்களில உள்ள சில மர்மங்கள், சில நம்பிக்கைகள் ஆச்சர்யமூட்டுகிறவையாக இருக்கும். இவற்றை மூட நம்பிக்கை என்று தள்ளி வைத்துவிட முடியாது, அதற்குள் ஏதோ ஒரு உண்மை இருக்கும். அதை விஞ்ஞான ரீதியாக அணுகும் படம். ஜி.எம்.குமார், ஜோசப், கஞ்சா கருப்பு, சிங்கம் புலி நடிக்கிறார்கள். சில நீயூபேஸ்களையும் அறிமுகப்படுத்துறோம்" என்கிறார் இயக்குனர் ஆனந்த்

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்