Your Ad Here

வடகறிக்கு ஆசைப்படும் ஸ்வாதி!


  சுப்பிரமணியபுரம் படத்தில் அறிமுகமான ஸ்வாதி அதற்கு பிறகு தமிழில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் தெலுங்குக்கு சென்று விட்டார். இப்போது தன் பெயருக்கு பின்னால் ரெட்டியை சேர்த்துக் கொண்டு ஸ்வாதி ரெட்டியாகி அடுத்த ரவுண்டுக்கு தயாரகிவிட்டார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா அவரது செகண்ட் ரவுண்டை ஆரம்பித்து வைத்தாலும் அதில் இரண்டு ஹீரோயினில் ஒருவர் என்பதால் பெரிய சந்தோஷம் இல்லை ஸ்வாதிக்கு. இப்போது அவர் எதிர்பார்ப்பது வடகறியை.

ஜெய்க்கு ஜோடியா நடிக்கும் இந்தப் படம் காமெடிப் படம். "ரொம்ப என்ஜாய் பண்ணி நடிச்சேன். நிறைய அனுபவங்கள் கிடைச்சுது. அதனால வடகறியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். அமளி துமளி படத்தில் நகுலுடன் நடிச்சிக்கிட்டிருக்கேன். அதுவும் காமெடி ஸ்கிரிப்ட்தான்" என்கிறார் ஸ்வாதி. இதுதவிர ஒரு மலையாள கமர்ஷியல் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பெயருக்கு பின்னால ரெட்டி சேர்ந்த ராசியில் பிசியாகிவிட்டார் ஸ்வாதி.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்