Your Ad Here

நடிகர் சங்கம் கோரிக்கை சிவாஜி சிலை அகற்றாமல் இருக்க நடிவடிக்கை எடுங்கள்


       மெரினா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது என்று ஒருவர் பொதுநல வழக்கு போட்டிருக்கிறார். எந்த காரணத்தைக் கொண்டும் சிவாஜி சிலை அகற்றப்படக்கூடாது என்று இயக்குனர்கள் சங்கம் கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறது. மற்ற சங்கங்களும் கையெழுத்து வேட்டைக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி ஆகியோர் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: மறைந்த நடிகர் திலகம் சிவாஜி பல பெருமைகளுக்கு உரியவர்.

தமிழ் நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலும், உலக அளவிலும் போற்றப்படும் அற்புத கலைஞர். அவரது சிலை மெரினா கடற்கரை சாலையில் அமைந்துள்ளதால் எந்தவித போக்குவரத்து இடையூறும் இல்லை என்பதை அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துரைத்துள்ளார்.

சிலை நிறுவப்பட்டு பல வருடங்கள் ஆகியும் போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மை என்பதை தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது. இந்த உண்மையை நீதிமன்றத்தில் அளிக்கும் விளக்கத்தில் தெரிவிக்க வேண்டும் என்று போக்குவரத்து காவல்துறை கமிஷனரை கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்