Your Ad Here

வாய்ப்பு தந்த யுவனை திணற வைத்த பிரியா ஆனந்த்!


    தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோக்கள் பாடுவது பேஷனாகிவிட்டது. ஹீரோக்களைத் தொடர்ந்து ஹீரோயின்களும் தங்கள் படங்களில் ஒரு பாடலை பாடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் ரம்யா நம்பீசன் ‘பாண்டியநாடு’ படத்தில் ‘பை பை கலாய்ச்சி வை’ என்ற பாடலை பாடியுள்ளார். இப்பாடல் இணையதளங்களில் அதிக ஹிட் அடித்துள்ளது.

இவரைத் தொடர்ந்து பிந்துமாதவியும் இமான் இசையில் பாட வாய்ப்பு கேட்டு வருகிறார். லட்சுமி மேனனும் பாடுவது தனக்கு பிடிக்கும். தான் நடிக்கும் ஒருபடத்திலாவது பாடிவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்து வருகிறார். இந்த ஆசை தற்போது பிரியா ஆனந்துக்கும் வந்துள்ளது.

இவர் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ‘வை ராஜா வை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவிடம் தன்னுடைய பாடும் ஆசையை கூறியிருக்கிறார் பிரியா ஆனந்த். யுவனும் அவரை பாட வைக்க முன்வந்தார்.

இதையடுத்து, ஒரு பாடலை கொடுத்து பிரியா ஆனந்தை பாடவைத்தாராம். பல டேக்குகள் வாங்கியும் பிரியா ஆனந்தால் கடைசிவரை அந்த பாடலை சரியாக பாடமுடியவில்லையாம். இறுதியாக ஸ்டுடியோவில் இருந்து யுவன் கொடுத்த பாடலை பாடாமலேயே வெளியே வந்துள்ளார் பிரியா ஆனந்த். இன்னும் சில நாட்களில் பாடும் திறமையை வளர்த்துக் கொண்டு மீண்டும் வந்து பாடப் போவதாக பிரியா ஆனந்த் கூறியுள்ளார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்