Your Ad Here

அடுத்த மாதம் ரீமாவுக்கு கல்யாணம்!


  மலையாள நடிகை ரீமா கலிங்கலும், இயக்குனர் ஆஷிக் அபுவும் தீவிரமாக காதலிப்பது மலையாள தேசத்துக்கே தெரிந்த உண்மை. அவர்கள் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்கள் என்ற செய்திதான் புதிது. ஆனால் அதனை மறுத்திருக்கிறார் ஆஷிக். "நான் ரீமாவை திருமணம் செய்து கொண்டதாக வந்த செய்தி தப்பு. காதலிப்பதை வெளிப்படையாக சொல்லும்போது கல்யாணத்தை எதுக்கு ரகசியமா செய்துக்கணும். இரு வீட்டாரின் சம்மதத்துடன் அடுத்த மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.

இவர்களது லவ் பிளாஷ் பேக்... பிரபல மலையாள இயக்குனர் கமலிடம் உதவியாளராக இருந்த ஆஷிக் மம்முட்டி நடித்த டாடிகூல் படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். அடுத்து சால்ட் அண்ட் பெப்பரும், 22, பீமேல் கோட்டையம் படத்தை டைரக்டர் செய்தார். மூன்று படங்களும் சூப்பர் டூப் ஹிட். 22 பீமேல் கோட்டையம் படத்தில் ரீமா நடித்தார். அப்போதுதான் இவர்களுக்குள் லவ் ஆச்சு. ரீமா ரிது என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், இப்போது பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்