Your Ad Here

புதிய படங்களில் நடிப்பதற்கில்லை! நோ என்ட்ரி போர்டு மாட்டினார் த்ரிஷா!


   கடந்த ஆண்டே தெலுங்கு நடிகர் ராணாவை த்ரிஷா திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீடியாக்களில் பற்றி எரிந்த செய்திகளை அப்போதைக்கு மறுப்பு செய்திகள் மூலம் அணைத்தார் த்ரிஷா. அந்த நேரம் பார்த்து ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை, தெலுங்கில் ஒரு படம் என மூன்று படங்களில் அவர் புக்கானதால், த்ரிஷாவின் மறுப்பு செய்திக்கு மரியாதை கிடைத்தது.

ஆனால், முப்பதை கடந்து நாற்பதை நோக்கி ஏறுமுகத்தில் அவரது வயது சென்று கொண்டிருப்பதால், தாய்குலம் உமா கிருஷ்ணன் ரொம்ப பயப்படுகிறாராம். இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகள் கழிந்தால் அதன்பிறகு ஆளாளுக்கு மகளின் வயதை காரணம் காட்டி இரண்டாம் தாரத்துக்கு கேட்கத் தொடங்கி விடுவார்கள் என்பதால், அடுத்த ஆண்டு எப்படியேனும் மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்தி விட வேண்டும் என்று துடிக்கிறாராம்.

தனது நிலையை புரிந்து கொண்ட த்ரிஷாவும், இதற்கு மேலும் தாமதித்தால் மைனஸ் ஆகி விடுவோம் என்று நடித்து வரும் படங்களின் தயாரிப்பாளர்களிடம் விரைவில் படங்களை முடித்து என்னை வெளியே விடுங்கள் என்று கேட்டுக்கொண்டு வருகிறாராம். அதோடு, அடுத்தபடியாக நடிப்பதற்காக சில படாதிபதிகள் த்ரிஷாவை தொடர்பு கொண்டபோது, அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்கிறேன். அதற்கு பிறகு வேண்டுமானால் நடிக்கிறேன். அதுவரைக்கும் என் வீட்டுப்பக்கம் பட விஷயமாக யாரும் வராதீர்கள் என்று நோ என்ட்ரி போர்ட் எடுத்து மாட்டி விட்டாராம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்