Your Ad Here

எமிஜாக்சனை முற்றுகையிட்ட இயக்குனர்கள்!


  மதராசப்பட்டினம், தாண்டவம் படங்களில் நடித்த எமிஜாக்சன், தற்போது ஷங்கரின் ஐ படத்தில் விக்ரமுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் நடிக்கத் தொடங்கியபோதே அவருடன் நடித்த ஆர்யா, விக்ரம் போன்ற நடிகர்களின் சிபாரிசின் பேரில் சில படங்கள் எமியை நோக்கி படையெடுத்தன.

ஆனால், ஐ படம் முடிந்த பிறகுதான் அடுத்த படத்தில் கமிட்டாக வேண்டும் என்று சொன்ன ஷங்கர், இந்த படம் எப்போது முடியும் என்று எனக்கே தெரியாது என்றும் சூசகமாக தெரிவித்ததையடுத்து, புதிய படங்களில் கமிட்டாகாமல் இருந்தார் எமி. ஆனால், தற்போது அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் கிட்டத்தட்ட படமாக்கப்பட்டு விட்டதால், புதிய படங்களுக்கான கதை கேட்பதில் தீவிரமடைந்துள்ளார்.

அப்படி அவரிடம் கதை சொல்லியிருக்கும் இயக்குனர்கள் அடுத்தபடியாக விஜய், அஜீத், சூர்யா என மேல்தட்டு ஹீரோக்களை வைத்து படம் இயக்கப்போகிறவர்கள். அதனால், ஐ படத்தை முடித்ததும் பாலிவுட்டில் ஒரு ரவுண்டு செல்ல வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்திருந்த எமி, பெரிய படங்கள் கிடைக்கும் சூழல் உருவாகியிருப்பதால் பாலிவுட் செல்லும் திட்டத்தை கைவிட்டு விட்டு, கோலிவுட்டில் நிரந்தர முகாம் போட முடிவெடுத்துள்ளாராம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்