Your Ad Here

ஜில்லா படத்தின் முதல் லுக் போஸ்டர் தீபாவளியன்று வெளியீடு


   தீபாவளியன்று ஜில்லா படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியிடப்பட உள்ளது.

துப்பாக்கி, தலைவா படங்களைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் ‘ஜில்லா’. இப்படம் மதுரையை பின்னணியாகக் கொண்ட கதையில் உருவாகிறது. காஜல் அகர்வால் ஜோடி, மலையாள சூப்பர் ஸ்டார் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்திரி தயாரிக்கிறார். நேசன் இயக்குகிறார்.

இதன் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. பொங்கல் அன்று வெளியிட முடிவு செய்து அதற்கேற்ப பணிகளை வேகப்படுத்தி உள்ளனர். இதுவரை ஜில்லா படம் சம்பந்தமான எந்த விளம்பரங்களும் வெளிவராத நிலையில் வருகிற தீபாவளியன்று இந்தப் படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது.

இது விஜய் ரசிகர்களுக்கு பெரிய விருந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்