Your Ad Here

ஆரம்பம் பெரும்பான்மை தியேட்டர்களை கைப்பற்றியது


   தீபாவளியையொட்டி வருகிற 31ந் தேதி அஜீத் நடித்த ஆரம்பம் ரீலிசாகிறது. நவம்பர் முதல் தேதியில் பாண்டியநாடும் நவம்பர் 2ந் தேதி, தீபாவளி அன்று ஆல் இன் ஆல் அழகுராஜாவும் ரிலீசாகிறது.

மூன்றுமே பெரிய படங்கள் என்பதால் தியேட்டர்களை பிடிப்பதில் கடும் போட்டி நிலவியது. இந்த போட்டியில் ஆரம்பம் பெரும்பான்மை தியேட்டர்களை கைப்பற்றி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

தமிழ் நாட்டில் உள்ள சுமார் 850 தியேட்டர்கள் ரிலீஸ் சினிமாவுக்கு ஏற்ற சொகுசான தியேட்டர்கள். இவற்றில் சுமார் 500 தியேட்டர்களில் ஆரம்பம் ரிலீசாகிறது.

ஆல்இன் ஆல் அழகுரஜா 300 தியேட்டர்களிலும், பாண்டிய நாடு சுமார் 200 தியேட்டர்களிலும் ரிலீசாகிறது. “கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளடக்கிய ஏரியாவில் 75 தியேட்டர்கள் ரிலீஸ் தியேட்டர்கள். இவற்றில் 40 முதல் 50 தியேட்டர்களில் ஆரம்பம் ரிலீசாகிறது” என்கிறார் ஆரம்பம் தியேட்டர் ரைட்ஸ் வாங்கியுள்ள காஸ்மோ பிக்சர்ஸ் சிவா.

படம் முதலில் ரிலீசாவதாலும், அஜீத் படத்துக்கு எப்பவுமே மாஸ் ஓப்பனிங் இருக்கும் என்பதாலும் தியேட்டர்காரர்கள் ஆரம்பம் படத்தையே ரிலீஸ் செய்ய விரும்புகிறார்கள்.

ஒரு எக்ஸ்ட்ரா தகவல்: ஆரம்பம் படம் ஓடும் நேரம் சரியாக 2 மணி 30 நிமிடம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்